Sunday, March 24, 2013

எஸ்.வி. சேகர் அவர்களின் நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை……

 

எஸ்.வி. சேகர் அவர்கள், தனது நெஞ்சை தொட்ட‍ கதை ஒன்றை தனது முகநூல் பக்க‍த்தில் பகிர்ந்துள்ளார். அதை படித்துப் பார்த்த‍ போது எஸ்.வி.சேகர் அவர்களது நெஞ்சை மட்டும் அல்ல‍ எனது நெஞ்சையும் தொட்டுவிட்ட‍து. உடனே இச்சிறுகதையை வாசகர்களுக் காக பகிர்ந்துள்ளேன்.

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடு வார்.. ஒரு நாள் ‘ஆபீஸ்போய்  வேலை செய்துபார்..  சம்பாதிப் பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..  அவள் ஒருநாள் பொறு மை இழந்து, ஒருநாள் நீங்க வீட்டில் இருந்து பசங்களை பார்த்துக் கோங்க..காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப்பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு  அனுப்புங்க. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சு தான்பாருங்களேன், என எதிர் சவால் விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண் டான். அவன் வீட்டில் இருக்க. இவள் ஆபீஸ் போனாள். ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ் முதலாளி மனைவி என்பதை மனதில் கொள் ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணிஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்த போது ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல பரிசுப் பொருள் வாங்கிக் கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய் யான காரணம் ஒன்றை சொல்லி விட்டு, மண மக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள். பந்தி யில் உட்கார்ந்த வளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே. இலையில் வைத் ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள். முறுக்குகணவனுக்குப்பிடிக்கு மே என்று அதையும் கைப் பைக்குள் வைத்துக் கொண் டாள். அவள் சாப்பிட்டதை விட,  பிள்ளை களுக்கும் கண வனுக்கும் என பைக்குள் பதுக் கியதே அதிகம். ஒரு வழியாய் வீடு வந்து இறங்கி யவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்கு மாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்த தும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள் சொல் றதை கேட்கமாட்டேங்குது.. படின்னா படிக்கமாட்டேங்குது. சாப்பி டுன்னா சாப்பிட மாட்டேங்குது.  அத்தனை பேரையும் அடிச்சு

ந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சி ருக்கே என்று பாய, அவளோ, அய்யய் யோ பிள்ளைகளை அடிச்சீங்களா.. என்றவாறேஉள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கை போட்டவள் அதிர்ச் சியுடன், ‘ஏங்க இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..

ஓஹோ அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங் கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை . இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கை யை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.

அதுபோல பொருளீட்டி வரக்கூடிய ஆண் களின் பங்கும் அளப் பரியது.. ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத் தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்பு களை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகி விட்டது..

இந்த சூழ்நிலையில் ஒருகுடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண் டிருந்தால்தான். எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ  முடியும். இதை உணர்ந்து வாழவேண்டும்.

THANKS TO UTK SIRS MAIL.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

bug