Friday, August 9, 2013

ஒரு புத்தர் கதை…!

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்தார்.
ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்திலோ வசைமொழிகளுடன் அவமானப்படுத்தல்களும் அரங்கேறின.
புத்தரோ அமைதியாய் கடந்து செல்ல முற்பட்டார்.
அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.
“யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” என்று கடைசியில் கேட்டேவிட்டார்கள்.
புத்தர் சிரித்துக்கொண்டே..
“இதுக்கு முன் நான் சென்ற கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்து, புகழாரம் சூட்டினார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என அத்தனையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு செல்லப் போவதில்லை. இங்கே தான் தந்துவிட்டுச் செல்லப்போகிறேன். எனவே எதுவும் என்னை பாதிக்கச் செய்யாது” என்றாராம்.
காயப்படுவதும், காயப்படுத்துவதும் நம் மனதின் பக்குவத்தை பொறுத்தே அமையும்.

 

form the facebook link of tamilachi.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

bug