Friday, August 2, 2013

குட்டிக் கவிதை தொகுப்பு..!

சீரியல்களின் சிணுங்கல்

மழை கூடத்
தன் பிழையை
ஒப்புக் கொண்டது!
சீரியல்களால் சிந்தப்படும்
கண்ணீருக்குமுன் தான் ஒரு
காணல் நீரென்று….

——————

ஒற்றுமை

பேசத் தயங்கியதால்
என்னவள் கண்களால் ஜாடை
காட்டினால் -
எனக்கு திருமணம்
ஆகி விட்டதென்று…
பதபதைத்துப் போனேன் நான்…
என்ன ஒரு ஒற்றுமை
எங்களுக்குள்?

——————–

ஹைக்கூ

அள்ளி அள்ளிக் கொடுத்தும்
அனுவளவும் குறையவில்லை
அம்மாவின் அன்பு…

— கண்ணீருடன்
பாவைப் பிரியன்

—————-

அழகு
நிலவே!
நீ என்ன சிறுகுழந்தையா?
மாதத்திற்கு இருமுறை
கண்ணாம்பூச்சி விளையாடுகிறாயே?
பழகிய நண்பர்களை தொலைத்து
பாலை தேசத்தில் வசிக்கும்
எனக்கு தனிமையைத்
தந்து விடாதே!
நீ
எனக்கு வேண்டும்…
இருளினை நீக்கி
ஒளியினைத்
தருவதற்க்கு அல்ல…
அழும் குழந்தைகளுக்குத்
தாய்ப்பால் ஊட்டுவதுபோல
தளரும் வேளையில்
தன்னம்பிக்கையூட்ட…

—————-

மலர்கள்

கண்டுகொண்டேன்…
கண்டுகொண்டேன்…
பொய்சொல்ல மாட்டேன்
என்ற நீ என்னைப் பிடிக்காது
என்றதை…
அசைவத்தை தொடமாட்டேன்
என்ற நீ கண்களால் மீனிரண்டை
பாதுகாகிறாய் என்பதை…
அது போகட்டும் -
என்னைப் பார்த்தவுடன்
ஏனடி நாணத்தால்
சிவந்து விடுகிறாய்?
செவ்வந்திப் பூக்களைப் போல…

—————

உன் வருகையை
எதிர்பார்த்து…

வறண்ட பாலையாய்
தவிக்கிறேன்…
உன் வருகையை
எதிர்பார்த்து…
ஒருமுறையாவது வருவாயா?
என் முகம் பார்த்து…

————-

terrorism

மனிதன் கடவுளை மறுத்தால்
மன்னித்துவிடலாம்!
மனிதன் தானொரு மனிதன் என்பதை
மறுத்தால்?

தீவிரவாதிகள் மனிதத்திற்கு
மட்டுமல்ல மதத்திற்கும் எதிரானவர்கள் தான்…

(november 27 th bomblast 2008)

———————————————————

taj_1_440674a

அழுகுராய்…

குழந்தையின் பெயரோ ‘ஜாதி’
அதன் அழுகையால் அணைந்தது
மனிதம் எனும் ‘ஜோதி’
தன் மழலை கடித்த மார்பகம் போல
துடியாய் துடித்தது ‘மனுநீதி’.

காதலின் நினைவைக் கூறும்
தாஜ்மகால் எனும் பெயரினைக்
கொண்டதால் உன்னை கூறுபோட்டனரோ?
காதலையும் மனிதத்தையும்
அழிக்க நினைப்பவர்கள் அந்தோ!
அழிவார்கள்! -
ஆயுதம் பிடித்தவன்,
ஆணவம் பிடித்தவன் – தீய
இறை கோபத்தைப் பிடித்தவனாம்…

நெட்டில்… சுட்டது…!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

bug