Wednesday, June 19, 2013

பச்சை பொய்… தமிழ் ஜோக்ஸ்…

செக்கிங் மாஸ்டர்: டிக்கெட் கொடுங்க? பயணி: இந்தாங்க. செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட் பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா? செக்கிங் மாஸ்டர்: ......... ????


"பரவாயில்லையே.. சைக்கிள்கூட காஸ்ல ஒடுதா..?" "யோவ் விளையாடாதே! நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்.."


"நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே.." "ஐயையோ! அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது.. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன்"


"ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?" "தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்"


"நீங்கதானே தமிழ்செல்வன்..?" "ஆமாங்க..?" "உங்க பேர்லே கணக்கு இருக்கா..?" "கணக்கு- இல்லைங்க தமிழ்-தான் இருக்கு?"

 

FOR MORE VIEW FUN & FUN ONLY

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

bug