Saturday, September 7, 2013

/////முட்டாள் ஜோக்ஸ்///

 

"பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க?" "அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!"


மேனேஜர்: எங்க பேங்க்ல இண்ட்ரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம். கிராமத்தான்: கொடுக்கறத கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாம்ல.. ஏன் இண்ட்ரஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?


ஒருவர்: என்னதான் இருந்தாலும் பெருமாள் கோயில் ஐயர் பையனா இருக்கலாம், அதுக்காக இப்படியா? மற்றொருவர்: என்ன பண்ணான்? ஒருவர்: ஹெல்மெட்டுக்கு பதிலா கிரீடத்தை போட்டுக்கிட்டு போறான்....


டாக்டர்: சாப்பிட்டதுக்கு அப்புறமா தூக்க மருந்து சாப்பிட்டீங்களா? நோயாளி: ஐயயோ! தூக்க மருந்து சாப்பிடாம மறந்து போய் தூங்கிட்டேன்.. டாக்டர்: அப்புறம் எதுக்குயா உனக்கு தூக்க மருந்து?


"ஏப்ரல் முதல் தேதி அன்று அய்யாசாமி ஒரு பஸ்ஸில் ஏறினார். கண்டக்டர் டிக்கெட் வாங்க சொல்ல, பத்து ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினார்..." "பின் கண்டக்டரைப் பார்த்து சத்தமாக 'ஹே ஏப்ரல் பூல்! என்னிடம் பஸ் பாஸ் இருக்கே!?' என்றார்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

bug