Thursday, July 25, 2013

Tamil Jokes

நண்பர்-1: என் பையனுக்கு 'செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு! நண்பர்-2: ஏன், என்னாச்சு? நண்பர்-1: எந்த நேரமும் அவளையே 'சுத்திச் சுத்தி' வர்றான்.


பெண்: டாக்டர், இவர் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார். டாக்டர்: நீங்க ஏன் பார்க்கறீங்க?


"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?" "ஒன்றும் செய்யக் கூடாது!"


"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.." "ஏன்?" "அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"


"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?" "சம்பளம் கைக்கு வந்ததும்..." "சம்பளம் எப்போ கைக்கு வரும்?" "கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

"போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.."


"முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?" "டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"


"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?" "ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"


"உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?" "அதனால உனக்கென்ன?" "நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"


"புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?" "தெரியலையே.." "புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

bug