Thursday, July 25, 2013

Tamil Jokes

 

ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?" "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"


"என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?" "அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு.."


"புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது" "புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?" "என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"


"மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?" "என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!"


"அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே..?" "விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்?"


நடுவர்: என்ன சார் உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு, ஒரு பந்துல 2 பேருக்கு அவுட் கொடுக்க முடியாது சார் ரூல்ஸ் இடம் கொடுக்காது! கேப்டன்: இந்தப் பந்துல 2 பேர் அவுட் ஆவாங்கன்னு நான் ஏகப்பட்ட பணம் வாங்கிட்டேனே சார் இப்ப என்ன செய்றது....?


"இந்த ஆள் டி.வி. மெக்கானிக்கா.. இல்லே சைக்கிள் மெக்கானிக்கா..?" "ஏன் கேக்கறீங்க..?" "டி.வி-யில பிக்சர்டியூப் சரியில்லேங்கறேன்.. பங்க்ச்சர் ஒட்டிடலாம்ங்கறான்"


"எங்கப்பா யார் எது சொன்னாலும் நம்பிடுவார்.." "சரி.. அதுக்கும் சுவர்ல ஜிமிக்கியா மாட்டி வெச்சிருக்காரே.. அதுக்கும் என்ன சம்பந்தம்..?" "சுவருக்கும் காது உண்டுனு யாரோ அவர்கிட்ட சொல்லிட்டாங்க அதான்!"

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

bug