Wednesday, October 16, 2013

நம்ம மந்திரிகள் … அப்பவே அப்படித்தான்..!

ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன்.
அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. வேற நாட்டுத் திருடன்.
அவன் பேசற மொழி தெரியல.
அந்த மொழித் தெரிந்த ஒரு மந்திரியை கூப்பிட்டு பேசச் சொன்னாரு ராஜா.
மந்திரி,
"‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ உன்னை காப்பாத்துறேன் என்றார்
அவனும் பயத்துல அந்த மந்திரிக்கிட்ட கட கடன்னு உண்மை எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..
‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்ல மாட்டேங்கறான்.
இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’
ஹி ஹி ஹி அப்பவே நம்ம மந்த்ரிங்க எல்லாம் அப்படித்தான் போல

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

bug